தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? அது எங்குபோய் முடியுமெனத் தெரிந்துகொள்ளுங்கள்...

தலைவலி என்றவுடனே, தைலம் தேய்த்துக் கொண்டு கொஞ்ச நேரம் தூங்கி எழுந்துவிட்டு, வழக்கமான வேலைகளைத் தொடர ஆரம்பித்துவிடுகிறோம். அது முற்றிலும் தவறான ஒன்று.

ஒற்றைத் தலைவலி சில நேரங்களில் உங்களைப் பாடாய்படுத்தும். அதை சாதாரணமான தலைவலியாக மட்டும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.
ஒற்றைத் தலைவலி என்பது உங்களுக்கு இதய நோய்கள் உண்டாவதற்கான முன் அறிகுறியையே வெளிப்படுத்துகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதயநோய்கள் பற்றி ஜெர்மனியில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், இதய நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதற்கு முன்பாக, ஒற்றைத் தலைவலியால் அவதியுற்று இருந்தது தெரிய வந்தது.

ஒற்றைத் தலைவலி என்பது ஆபத்தான இதய நோய் வருவதற்கான எச்சரிக்கை என்கின்றனர். 25 வயது முதல் 42 வயதுக்கு உட்பட்ட 1329 பெண்கள் இந்த ஆய்வில், மருத்துவர்களின் சோதனையில் கண்காணிக்கப்பட்டு வந்தனர். அவர்களில் 73 சதவீதம் பேர் ஒற்றைத் தலைவலியால் அவதியுற்றிருந்தனர். 223 பேர் மாரடைப்பால் இறந்தனர்.

மாரடைப்பால் பாதிக்கப்படும் பெண்களில் 39 சதவீதம் பேர் ஒற்றைத்தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிறது அந்த ஆய்வு முடிவு.
ஒற்றைத் தலைவலி வந்தால், 62 சதவீதம் மாரடைப்பும் பிற இதய நோய்களும் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தலைவலி தானே என்று அஜாக்கிரதையாக இருக்காமல் ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகுவது நல்லது.





No comments:

Post a Comment