பல மாதங்களாக காத்திருந்த படம் 2.0. பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.
இப்படத்தின் கதை ஓரளவு டிரைலர் பார்த்ததுமே பலருக்கும் தெரிந்திருக்கும். இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வசீகரன், சிட்டி என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் மூன்றாவதாக ஒரு ரஜினி கதாபாத்திரம் இருக்கிறதாம். இதில் சூப்பர்ஸ்டார் கொசு போன்ற சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இந்த கதாபாத்திரத்துடைய பாடல் தான் ராஜாளி பாடலாம்.
இதை இப்படத்தின் ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி ஒரு பேட்டியில் தெரியாமல் கூறிவிட்டார்.
2.0 படத்தில் இப்படியொரு ரகசியம் தெரியுமா? உளறிய தொழில்நுட்பகலைஞர்.
credit by cineulagam