இந்தியாவின் முதல் இணைய தொலைபேசி வசதியை வழங்குகிறது BSNL

இந்தியாவிலயே முதன் முறையாக இணைய தொலைபேசி வசதியை வழங்குகிறது பிஎஸ்என்எல்.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் விங்க்ஸ் செயலியை தரவிறக்கம் செய்துகொண்டு இந்தியாவின் எந்த ஒரு தொலைபேசி எண்ணுக்கும் அலைபேசி எண்ணுக்கும் இணைய தொலைபேசி வசதியை ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை விங்ஸ் செயலி மூலம் யார் விங்ஸ் செயலியை வைத்திருக்கிறார்களோ அவர்களுடன் மட்டுமே பேச முடியும் என்ற நிலை பிஎஸ்என்எல் பயனாளர்களுக்கு இருந்து வந்தது.

தற்போது விங்ஸ் செயலி மூலம் எந்தவொரு தொலைபேசி எண்ணுக்கும் அலைபேசி எண்ணுக்கும் பேச முடியும் என்ற கூடுதல் வசதியை நாட்டிலியே முதல் முறையாக ஏற்படுத்தி தந்து இருக்கிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

இதனை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்கா தொடங்கி வைத்து பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்த வசதியைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக முன்பதிவினை இந்த வாரம் தொடங்கி உள்ளது பிஎஸ்என்எல். பதிவு  செய்தவர்களுக்கு வரும் இருபத்தி ஐந்தாம் தேதி முதல் இணைய வழி தொலைபேசி சேவை தொடங்கப்படும் என்று அறிவித்து உள்ளது பிஎஸ்என்எல்.